வேலூர் மாவட்டம், இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக் கிளையின் பன்னிரெண்டாம் ஆண்டு விழா லட்சுமி அரங்கில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக் கிளையின் பன்னிரெண்டாம் ஆண்டு விழா காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் லட்சுமி அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்கத்தின் அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் செயலாளர், எஸ்.எஸ்.சிவவடிவு . துணைத் தலைவர்கள் ஆர்.சீனிவாசன் ஆர்.விஜயகுமாரி வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார் வேலூர் மாநகராட்சியின் முதல் மண்டல தலைவர் புஷ்பலதாவன்னியராஜா மூத்த வழக்கறிஞர் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத் தலைவர் டி.எம்.விஜயராகவவலு வழக்கறிஞர் துணைத்தலைவர் வி.பாரிவள்ளல் , மற்றும் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில அரசின் விருது பெற்றவர்களுக்கும் சிறப்பாக செயலாற்றிய ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் யூத் ரெட் கிராஸ் மாணவர்களுக்கும், இலவச தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கியும் சிறப்புரையாற்றினார்.
செய்தியாளர் : சுதாகர்
கருத்துகள் இல்லை