வேலூர் மாநகராட்சி 53 வது வார்டு உறுப்பினர் பாபி கதிரவன் காவலர்களின் வீர வணக்கம் நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் ,வேலூர் வடக்கு காவல் நிலையம் தெற்கு காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு வேலூர் மாநகராட்சி 53 வது வார்டு உறுப்பினர் பாபி கதிரவன் காவலர்களின் வீர வணக்கம் நாளை முன்னிட்டு காவல் ஆய்வாளர்கள் ,உதவி ஆய்வாளர்கள், காவல் நிலையம் காவலர்கள் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சால்வை அணிவித்தும் ,கேடயம் மற்றும் இனிப்பு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். உடன் பாமக ஐடிவிங் தேவா ,பெண்கள் பாமக மகளிர் அணி வழக்கறிஞர் சத்யா, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : சுதாகர்
கருத்துகள் இல்லை