• சற்று முன்

    இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்..

    அக்ரோ டெக் குழுமத்தின் சார்பாக தமிழக விவசாய உற்பத்தியாளர் கூட்டமைப்பின் (FPO) கருத்தரங்கம் இந்திய தகவல் தொழில்நுட்பம் ஆராய்ச்சி மையத்தில் இன்று சிறப்புற நடைபெற்றது..

    இக்கூட்டத்திற்கு அக்ரோ டெக் குழும நிர்வாக இயக்குனர் திரு.S மாணிக்கம் தலைமையேற்க, சிறப்பு விருந்தினார்களாக MS.சுவாமிநாதன் அறக்கட்டளையைச் சேர்ந்த திரு.பரசுராமன், பூமி பிரைடு நிர்வாகி

    டாக்டர் .ஜோ , FPO ஆலோசகர் திரு.ஆனந்த குமார் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து FPO நிர்வாகிகள், விவசாயம் சார்ந்த உணவு உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த கருத்தரங்கை அக்ரோ டெக் குழுமத்தின்  இயக்குனர் திரு. மாணிக்கம் அவர்கள் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.அப்போது தனது உரையில் " விவசாய உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயத்துறையில் பொருளாதார மேம்பாடு, தொழில்நுட்ப செயல்பாடு மற்றும் அக்ரோ டெக் குழுமத்தின் திட்டங்கள் மூலமாக விவசாய உற்பத்தி பொருட்களை, நுகர்வோர்களுக்கு மாநிலம் முழுக்க தனது நிறுவனத்தின் பல்வேறு கடைகள் மூலமாக சந்தை படுத்துதல் குறித்து பேசினார்..

    சிறப்பு விருந்தினர் திரு. பரசுராமன் அவர்கள் பேசுகையில் அழிந்துவரும் விவசாயத்தையும், விவசாயியையும் காப்பற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் வைத்ததுடன்,நெல் உற்பத்தியை தவிர மண் வளத்துக்கேற்ப மாற்று பயிர்களான முருங்கை, சிறு தானிய வகைகளை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் என  அறிவுறுத்தியுள்ளார்.  மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையிலான நேரடி கொள்முதல் நிறுவனங்களை நிறுவி இளைஞர்கள் ஈடுபடவேண்டும் என்றும் ,  விவசாயிகள் விளைவிக்க வேண்டி விளைபொருட்கள் எவை, மண்வளத்துக்கு ஏற்ப்ப செய்ய வேண்டிய பயிர் வகைகள் எவை என்பதை உணர்ந்து ஒவ்வொரு விவசாயிகளும் விவசாயம் செய்வது அவசியம் என்றார் டாக்டர் ஜோ. 


    பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய இருவரும் 

    தமிழகத்தில் விவசாய மண் வளத்துக்கு ஏற்ப புதியதொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். வரகு, சாமை போன்ற சிறுதானிய வகைகளை கொண்டு நூடுல்ஸ் செய்வது, காய்கறி, நிலகடலை போன்றவைகள் விலை இல்லாமல் போகும் காலங்களில், அவற்றை மதிப்பு கூட்டி மத்திய, மாநில அரசுகள்  வழங்கும் கடனுதவிகளை கொண்டு சந்தைபடுத்த கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். விவசாய பொருள் உற்பத்தியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களது உற்பத்தி பொருட்களை குறித்து பேசி தங்களுக்குள் பல்வேறு கருத்துகளை பரிமாரி கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இவன் : அக்ரோடெக் FP0 மற்றும் நிறுவனங்கள், சென்னை.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad