முன்னாள் ராணுவத்தினர் மாநில ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில அளவிலான நிர்வாகிகள் தனியார் விடுதியில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் தலைவரும் பொது செயலாளருமான கேசவன், அமைப்புச் செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி, தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ராஜூ, திருப்பூர் மாவட்ட நிர்வாகி மாநிலத் துணைத் தலைவர் ராஜசேகரன்,முன்னிலையில் மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு வரவேற்றார் மேலும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த கூட்டத்தில் திருப்பூரில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்துவதற்க்கு முடிவெடுக்கப்பட்டது.
திருப்பூரில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முன்னாள் படைவீரர்கள் தலைவர்கள் அனைத்து மாவட்ட இராணுவ வீரர்கள் பிரச்சினைகள் குறி்த்து ஆலோசனை செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை