மதுரை மாநகராட்சி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.
மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், வழங்கினார். மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 64 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து கல்வி உபகரணங்கள் மாநகராட்சியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அ
அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக மாநகராட்சி ஈ.வெ.ரா.பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கணக்கு), திரு.வி.க. மாநகராட்சிபள்ளி (வேதியியல்), சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி (தாவரவியல்), வெள்ளிவீதியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி (தாவரவியல்), கம்பர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி (தாவரவியல்), பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளி (வணிகவியல்) ஆகிய ஆறு மாநகராட்சி பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு மேயர் ,பணி ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில், கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் நாகேந்திரன், முதுகலை ஆசிரியர்கள் உட்பட கல்வி பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை