Header Ads

  • சற்று முன்

    திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா 25ஆம் தேதி காப்புக்காட்டுடன் தொடக்கம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகின்ற 25ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்குகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாவினை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் தங்கி ஆறு நாட்கள் விரதம் இருப்பார்கள். இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற 25ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 29ஆம் தேதி அம்பாளிடம் முருகப்பெருமான் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 30ஆம் தேதி சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்கார நிகழ்ச்சியும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக 31ஆம் தேதி காலை முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி சிறிய சட்டத்தேரில் வலம் வரும் நிகழ்ச்சியும் அன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி ஆயிரக்கணக்கான தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக காலையில் பால்எலுமிச்சைச்சாறு திணை மாவு மற்றும் 1500 பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

    .செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad