Header Ads

  • சற்று முன்

    மதுரை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் முகூர்த்த தினமான இன்று 100க்கு மேற்பட்ட புதுமண தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது.*

    தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் முகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணம் நடைபெறும். கடந்த புரட்டாசி மாதங்களில் திருமண வைபவங்கள் எதுவும் நடைபெறாத நிலையில்  தற்போது ஐப்பசி மாதம் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் புதுமண தம்பதிகள் திருமணம் செய்து கொள்வது வழக்கம் இந்த நிலையில் உற்சவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணியசாமி தெய்வானை அம்மன் சன்னதி முன்பு இன்று  மட்டும் ஐப்பசி மாதம் மூகூர்த்த தினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமண தம்பதிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

    முகூர்த்த நாட்களில் கோயிலில் திருமணம் செய்வது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் முதல் முகூர்த்த தினமான இன்று திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஒரு நாள் மட்டும் திருக்கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமணத் தம்பதிகள் திருமணம் செய்து கொண்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா நடைபெற்று வரும் நிலையில்., பக்தர்கள் காப்பு கட்டி திருக்கோவில் மண்டபங்களில் விரதம் இருந்து வருகின்றனர். அதனுடன் இன்று முகூர்த்த தினமான இன்றும் புதுமணத் தம்பதியினரின் குடும்பத்தினர் ஏராளமானோர் கோவிலில் வருகை புரிந்துள்ளதால் இன்று சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஏராளமான பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad