• சற்று முன்

    இராஜபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வழிபாடுகள் நடைபெற்றன இன்று 30க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை ரவுண்டானா வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.

    ஊர்வலத்திற்கு முன்னதாக இந்து முன்னணி ஆர் எஸ் எஸ் விஷ்வ ஹிந்து பரிஷத் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பஞ்சு மார்க்கெட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது அதை தொடர்ந்து ஊர்வலம் நடைபெற்றது .

    இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பீர்த்தி  உட்பட நான்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 300க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது கரைக்கப்பட்டது..

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad