• சற்று முன்

    கோவில்பட்டியில் பள்ளி வாகனத்தின் அவசர கால கதவு வழியாக தவறி விழுந்து பள்ளி மாணவி பலத்த காயம்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தொட்டம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா மகள் ரதிமா (10) இவர் கோவில்பட்டி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று  வீட்டிலிருந்து வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது முடுக்களாங்குளம் வளைவு அருகே பள்ளி வாகனத்தின் அவசர கால கதவு  தானாக திறந்ததில் கதவின் அருகே அமர்ந்திருந்த பள்ளி மாணவி ஓடிக்கொண்டிருந்த பள்ளி வாகனத்தில் இருந்து சாலையில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். காயம் அடைந்த மாணவி கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இச்சம்பவம் குறித்து கொப்பம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி பள்ளி வாகனத்தின்  அவசர கால கதவு  வழியாக தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad