Header Ads

  • சற்று முன்

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்ட வகுப்பு துவக்க விழா மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் விழா

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்ட வகுப்பு துவக்க விழா மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் விழா உயர்கல்விததுறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.  இந்த விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் குமார், பதிவாளர் சிவக்குமார், கல்வி ஆராய்ச்சி மைய இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கா.பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாப்பேருரை ஆற்றினார்.

    இந்த  பல்கலைக்கழகம் 1965 ல் மதுரையில் காமராஜர் பெயரில் உருவாக்கப்பட்ட 3 வது பல்கலைக்கழகம் ஆகும்.5 கி.மி ஒரு ஆரம்பபள்ளியை உருவாக்கியவர் காமராஜர் .அதை  3 கிமீ க்கு ஒரு பள்ளியாக மாற்றியவர் கலைஞ்ர் கருணாநிதி. அனைத்து விதத்திலும் மதுரை முன்னோடியாக உள்ள ஒரு நகரம்.உயர்கல்வியில் தமிழகம்  வளர மதுரை எப்போதும  முக்கிய காரணமாக இருக்கும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 5 இளங்கலை படிப்புகளை இன்று துவக்கியுள்ளோம்.  இதே போல் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி எஸ் சி உற்பத்தி அறிவியல் எனும் புதிய பட்டப்படிப்பு  இந்தியாவிலேயே முதன் முதலில் டாடா நிறுவனத்துடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது.  எனவே  பாடப்புத்தகங்களை தற்காலத்திற்க்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். கல்வி என்பது சமுதாய  ஏற்றத்திற்க்கானதாக அமைய  வேண்டும்.

    ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எத்ற்கு என்ற நிலையை மாற்றியவர் பெரியார். கல்லிவியில் மகளரின் வளர்ச்சிக்கு உதவுவது தான் திராவிட மாடல். சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர் பெரியார், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். என்ற நிலையை உருவாக்கியவர் ஸ்டாலின்.  பெரியாரின் வழியை அண்ணா செய்தார் பின்னர் கலைஞர் தொடர்ந்தார். அதன் பின்னர்  ஸ்டாலின் செய்கிறார். இது தான் திராவிட மாடல் ஆட்சி இந்த ஆட்சியில் பெண்கள் கல்வி வளர்ந்துள்ளது, கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ந்துள்ளது. இது தான் திராவிட மாடல் ஆட்சி. கல்லுரியில் ஆங்கில வழி மட்டுமே என்ற இருந்த நிலையை மாற்றி ஆங்கில வழியில் இருந்த பாடத்திட்டத்தை தமிழ் வழிக்கு மாற்றியதோடு  மட்டும் இல்லாமல் ஆங்கில வழியில் படித்தால் கூட தமிழ் வழியில் தேர்வு எழுதலாம் என வசதி ஏற்படுத்தி தந்தவர் கலைஞர் இதனால் தான் இன்று தமிழ்கம் உயர்கல்வியில் மற்ற மாநிலங்களை விட உயர்ந்து நிற்கிறது.

    தமிழகம் தான் கல்வியில் வளர்ச்சி பெற்றுள்ளது.  தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. கடந்த காலங்களில் அண்ணா பல்கலைக்கழக  பெறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகும். அதாவது ஆண்டிற்கு 25 ஆயிரம் பேர் மட்டுமே படித்து வந்த நிலையை மாற்ற பொறியியல் படிப்பிற்க்கான  நுழைவுத்தேர்வை  கலைஞர் ஆட்சிக்காலத்தில் நீக்கிய பின்னர் மூன்று மடங்கு மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். நுழைவுத்தேர்வு பற்றிப்பலரும் பேசியிருக்கலாம். ஆனால் இன்று 3, 5,8 ஆகிய வகுப்புகளுக்கு நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களை பாதிக்கும் செயல் இந்த புதிய கல்வி கொள்கையை தான் வேண்டாம் என்கிறோம். நம்முடைய கல்வி கொள்கை நம் மக்களுக்கு ஏற்றாற் போல இருக்க வேண்டும். அதனால் தான் இரு மொழி கொள்கையை அண்ணா வேண்டும் என கோரினார். 

    தமிழ் மொழியோடு சேர்த்து வெளி மாநில, வெளி நாடுகளுக்கு சென்றால் பேச பன்னாட்டு மொழி ஆங்கிலம் போதும். இரு மொழி கொள்கை இருந்தாலே போதும்  இதைதான் திராவிடமாடல் என்கிறோம். இதை தான் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். தமிழ்கத்திற்க்கென தனி கல்வி கொள்கை உருவாக்கப்படும்.  

    கோவை பல்கலைக்கழகம் போல் மற்ற பல்கலைக்கழகங்களும் இன்றைய காலத்திற்கு ஏற்ப படிப்புகளை உருவாக்க வேண்டும்.  மாணவர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும். சிறு தொழில் துவங்கி வளர வேண்டும் . அதற்கேற்றவாறு பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் அமைய பேராசிரியர்கள் முய்றசிக்க வேண்டும் என கூறினார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்துள்ளார். அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி படிப்பவர்களுக்கு இலவச கல்வி. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது உலகிலேயே தமிழகத்தில் தான் புதுமைப்பெண் திட்டம் அமல்படுத்தபட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளும் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும். எனவும் டி ஆர் பி  வழியாக நடத்தப்படும் போட்டி தேர்வின் நேர்முக தேர்வில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு  அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் தனியாக மதிப்பெண் வழங்கப்படும். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக சம்பள பிரச்சினை சரிசெய்யப்படும்  என பேசினார்.  விழாவில் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad