மதுரை அவனியாபுரத்தில் பஞ்சு மில்லில் திடீர் தீ விபத்து
மதுரை அவனியாபுரத்தில் பஞ்சு மில்லில் மின் கசிவால் திடீர் தீ விபத்து உடனடியாக செயல்பட்ட தீயணைப்பு துறையினரால் பெரும் சேதம் தவிர்ப்பு மதுரை அவனியாபுரத்தை அடுத்த வைக்கம் பெரியார் நகர் சாலையில் வீடு துடைக்கும் பஞ்சு மற்றும் பிளாஸ்டிக் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இன்று காலை மின்கசிவால் திடீரென தீ பற்றி ஏரிந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவனியாபுரம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கம்பெனி மூடி இருந்ததால் ஊழியர்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்து நடந்த இடத்தில் கழிவுகள் மட்டும் இருந்ததால் மிகப்பெரிய பொருட்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மேலும் இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை