லாட்ஜில் அறை எடுத்து தங்கி பைக் திருட்டு வாலிபர் கைது
வாலாஜாவில் கடந்த சில மாதங்களாக பைக்குகள் திருடு போவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது பைக் திருட்டு ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் இந்நிலையில் வாலாஜா போலீசார் நேற்று வீசி மோட்டார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது அவர் வழியாக வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர் விசாரணையில் வேலூர் சைதாப்பேட்டை சேர்ந்த சலீம் வயது 20 கூலி தொழிலாளி எனவும் போதிய வருமானம் இல்லாததால் இருசக்கர வாகனங்கள் திருடி வந்தது தெரிய வந்தது சொந்த ஊரில் வாகனங்களை திருடினால் வெளியில் தெரிந்துவிடும் என நினைத்து கடந்தாண்டு ராணிப்பேட்டையில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி பைக் திருடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். முதன்முதலாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே வாலாஜா தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி இருந்த இரண்டு வாகனங்களை திருடியது விசாரணை தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சலீமை கைது செய்தனர் அவரிடம் இருந்து மொத்தம் நாலு பைக்குகள் பறிமுதல் செய்தனர் மேலும் இந்த திருட்டுக்கு உறுதுணையாக இருந்த அவருடைய நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை