வாலாஜா அருகே மனைவியை பிரிந்த துக்கத்தில் தூக்கிலிட்டு தற்கொலை
வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராம வேளாளர் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் வயது 52 இவருக்கு திருமணம் ஆகி மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவரை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடி பழக்கத்திற்கு ஆளான ஜயப்பன் தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இந் நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் கிராம ஏரிக்கரை ஓரம் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் உள்ள வேப்பமரத்தில் லுங்கியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாலாஜா போலீசாருக்கு கிடைக்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
கருத்துகள் இல்லை