Header Ads

  • சற்று முன்

    75 லட்சம் மதிப்பிலான பூச்சி மருந்து பரிசோதனை நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.

    கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 75 லட்சம் மதிப்பிலான பூச்சி மருந்து பரிசோதனை நிலையத்தை  மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.

    தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  வேளாண்மை துறை சார்பில்  தமிழக முடிவுற்ற திட்டங்களை  சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் இதில்  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி பரிசோதனை நிலையத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் , முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டனர்.இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன்,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் மனோகரன், பழனி குமார், முருகன், கோபி, மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad