Header Ads

  • சற்று முன்

    சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் அருள்மிகு ஸ்ரீ பாம்பாளம்மன் கோவில் 57 வது ஆண்டு விழா

    சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் அருள்மிகு ஸ்ரீ பாம்பாளம்மன் கோவில் 57 வது ஆண்டு விழா முளைப்பாரி உற்சவம் கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாம்பாலம்மன் கோவில் 57வது ஆண்டு  முளைப்பாரி உற்சவ விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. சோழவந்தான் தொழிலதிபர் எம். வி. எம் .மணி முத்தையா, கலைவாணி பள்ளி நிர்வாகி எம் வள்ளி மயில், சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவர் பேரூராட்சி கவுன்சிலர் மருது பாண்டியன், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன், மன்னாடிமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, யாகவேள்வியிணை துவக்கி வைத்தனர். தொடர்ந்து முத்து பரப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கோவில் முன்பாக  திரு விளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து ஐந்தாம் தேதி முதல் பதினோராம் தேதி வரை தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்வும், தொடர்ந்து பத்தாம் தேதி சனிக்கிழமை காலை பால்குடம் எடுத்தல் மாலை 5 மணிக்கு அம்மன் சிலை ஊர்வலத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. அன்று இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 16ஆம் தேதி காலை வைகை ஆற்றில் முளைப்பாரி கரைத்தல் நிகழ்வு அன்று இரவு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கமிட்டியாளர்கள் கிராம பொதுமக்கள் பாம்பாலம்மன் கோவில் நண்பர்கள் செய்து இருந்தனர். மன்னாதிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பவுன் முருகன் தலைமையில் சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad