• சற்று முன்

    கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உள்நோயாளிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். 



    இதனைத் தொடர்ந்து அரசு தலைமை மருத்துவமனையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவர் கமலஹாசன், மருத்துவர் பூவேஸ்வரி, மருத்துவர் மோசஸ் பால்,
    பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், அவைத் தலைவர் என் கே பெருமாள்,மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, காந்தி என்ற காமாட்சி, மாவட்டம் அம்மா பேரை செயலாளர் செல்வகுமார்,கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி,நகர மன்ற உறுப்பினர்கள் வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி, மாநில எம் ஜி ஆர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் வேலுமணி, மாவட்ட மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான்,அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், கழக பேச்சாளர் பெருமாள் சாமி,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, மனோகரன், பழனி குமார், பழனி முருகன், முருகன், கோபி, ஜெயசிங், குழந்தை ராஜ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad