சென்னை அனகாபுத்தூரில் விசிக சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்பு பேச்சு போட்டி நடைப்பெற்றது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்களின் 60-வது பிறந்தநாள் ஆகஸ்ட் 17 அன்று சிறப்பாக தமிழக முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியினரால் கொண்டாடப்பட்டு வந்தது அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர் அவர்களின் தலைமையில் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கு சிறப்பு பேச்சு போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தேவ அருள் பிரகாசம் துவங்கி வைத்தார், இதில் நடுவராக ஆசிரியர் தும்மாபிரான்சிஸ், அரச முதல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இதில் பம்மல் சுப்பிரமணி, நிசார் அகமது, நகரச் செயலாளர் ஜெகதீசன், சுதாகர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை கல்வி பொருளாதார விழிப்புணர் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் அனகை பாஸ்கர் ஏற்பாடு செய்தார்.
கருத்துகள் இல்லை