30 நிமிடத்தில் 27 யோகாசனங்கள் நோபல் புக் ஆப் வேல்ட்டு ரெக்கார்ட்ஸில் உலக சாதனை படைத்த 55 மாணவர்கள்
வண்டலூரில் 55 மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு 30 நிமிடத்தில் 27 யோகாசனங்கள் நோபல் புக் ஆப் வேல்ட்டு ரெக்கார்ட்ஸில் உலக சாதனை படைத்துள்ளனர்.
தாம்பரம் அடுத்த வண்டலூரில் சாய் யோக மையம் சார்பில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா குரு ராஜகோபாலன் உலக சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இதில் 55 மாணவ, மாணவியர் கண்ணை கட்டிக்கொண்டு 27 யோகாசனங்களை செய்து அசத்தினர். 55 மாணவர்கள் 30 நிமிடத்தில் 27 யோகாசனங்களை செய்தது உலக சாதனையாக நோபல் புக் ஆப் வேல்ட்டு ரெக்கார்ட்ஸ் அங்கீகரிக்கப்பட்டது. இந்த உலகசாதனையை நோபல் புக் ஆர் வேல்ட்டு ரெக்கார்ட்ஸின் தென் மாநில இயக்குனர் திலீபன் அங்கீகரித்து, யோகா குரு ராஜகோபானுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
மேலும் உலகசாதனை படைத்த 55 மாணவர்களுக்கும் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. அனுசியா, ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சோமசுந்தரம் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.
கருத்துகள் இல்லை