சதுரகிரிமலையில், சுவாமி தரிசனம் செய்வதற்காக குவிந்த பக்தர்கள்.....
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இன்று ஆவணி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு, சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிசேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அமாவாசை தினத்தை முன்னிட்டு, இன்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் வழிகளில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் யாரும் இறங்கவேண்டாம் என்று வனத்து
றை ஊழியர்கள், பக்தர்களிடம் வலியுறுத்தி கூறி வருகின்றனர். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை