• சற்று முன்

    சிவகாசி மாநகராட்சி அம்மா உணவகத்தில் மேயர், துணை மேயர் திடீர் ஆய்வு.....

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில், திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மாநகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் மூலம் தினசரி 300க்கும் மேற்பட்டவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்தை மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் திடீர் ஆய்வு செய்தார். உணவகத்தில், உணவு தயாரக்கப்படும் இடத்தின் சுகாதாரம் குறித்து பார்வையிட்டார். மேலும் உணவு தயாரிக்கப்பயன்படும் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் தரம் குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மேயர் சங்கீதா இன்பம், தயாரான உணவுகளை சாப்பிட்டு பார்த்தார். அம்மா உணவக ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உடன் மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலர் இருந்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad