Header Ads

 • சற்று முன்

  யாரைப் பார்த்து கொக்கரிப்பு? கம்யூனிஸ்ட் கட்சி அனாதை கட்சியாம்!  திமுக தயவில் 4 இடங்கள் பெற்றுள்ளதாம்! போராட்டம் நடத்துங்க பார்ப்போம்!  போராட்ட இடத்திலே அடித்து விரட்டுவோம்! கம்யூனிஸ்ட் கட்சி உருட்டலுக்கு எல்லாம் நீங்க பயப்படாதீங்க நான் பாத்துக்குறேன்! இப்படி- வாய்க்கொழுப்பு எடுத்து  வசைபாடி இருப்பது யார் தெரியுமா? கைபர், போலன் கணவாய் வழியே ஆடு மாடு ஓட்டிவந்த வந்தேறிகள்! பெரும்பான்மை மதவாத, வகுப்பு வெறியில் ஜீவித்து வாழும் இந்திய வகை பாசிஸ்டுகள்! ஜனநாயக விரோதம் ஒற்றை சர்வாதிகாரம்! ஒற்றை கலாச்சாரம் போன்ற கொள்கையை கொண்டவர்கள்! ஆங்கில  ஏகாதிபத்திய எதிர்ப்பு அணுவளவும் இல்லை! மாறாக சரணாகதி ஆதரவு! விடுதலைப் போராட்டத்தில் துளியும் பங்கேற்க வில்லை. மாறாக விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள்! “ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கம் அல்ல ஆர்எஸ்எஸ்”  என்று பிறக்கும்போதே ஆங்கிலேயே விசுவாசத்தோடு கூவிப் பிறந்தது! இந்தியாவில் பாசிச அடிப்படையில் இந்துத்துவத்தை கட்டியமைக்கத் துடிப்பவர்கள்! சந்திரசேகர ஆசாத், பகத்சிங் போன்றோர் புரட்சிக் காரர்கள் இல்லை கலகக்காரர்கள் என்று கொச் சைப்படுத்திய கூட்டம்! இத்தகைய கூட்டத்தைச் சேர்ந்த ஆர். எஸ். எஸ். அமைப்பின் அரைவேக்காடு எச்.ராஜா  என்பவர்தான் அதிகாரத் திமிரில் இப்படி அத்துமீறி உள்ளார். இந்த அரைவேக்காட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன தெரியும்?  கருக்கொள்வதற்கு முன்பும்!  கருக்கொண்ட போதும்! கருவாகி சிசுவாக வளர்ந்த போதும்!  கருவறையில் இருந்து வெளிவந்த போதும்!  பிறந்து தவழ்ந்த போதும்! எழுந்து நடந்த போதும்! -அழிக்கத் துடித்தார்கள்!  லாகூர் சதி வழக்கு, பெஷாவர் சதி வழக்கு,  கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, சிட்டகாங் சதி வழக்கு மற்றும் மாவட்டங்கள் பெயரில் சதி வழக்கு என்று அடுக்கடுக்கான சதி வழக்குகள்!

  கட்சி இயங்குவதற்கு தடை! தூக்குக் கயிறுகள்! துப்பாக்கி குண்டுகள்! குண்டாந்தடி தாக்குதல்! ஆயுள் தண்டனைகள்! கொட்டடிச் சிறைகள்! இப்படி அடக்குமுறைகள் எத்தனை உண்டோ! அத்தனையையும் எதிர்கொண்டு அடித்து நொறுக்கி முன்னேறிய கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!

  அடக்குமுறைகளை அடித்து நொறுக்கி பிறக்கும் போதே... இந்தியாவுக்கு முழு விடுதலை! ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தியாவில் இருந்து விரட்டி அடிப்போம்! நிலப்பிரபுத்துவத்தை தகர்ப்போம்! ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்போம்! என்ற முழக்கத்தோடு பிறந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

   இதை எவராலும் மறுக்க முடியாது  வரலாற்று உண்மை!

  வந்தேறிகளுக்கும் வாய்க்கொழுப்பு எடுத்தவர்களுக்கும் கூட இது நன்கு தெரியும்! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள்

  பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு ஏற்பட்டால் என்பதை கனவில் கூட கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள்! வீராதி வீரர், சூராதி சூரர் என்று வர்ணிக்கப்பட்ட இவர்களின் வீரசாவர்க்கர் கொலை வழக்கு ஒன்றில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட போது ஆங்கில அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெட்கமில்லாமல்  வெளியே வந்தவர்!  அரசியல் அணிச் சேர்க்கை என்று வந்துவிட்டால் யார் தயவிலும் யாருமில்லை என்பது பொருள்!!

  அதிகாரபலம், பணபலம், குண்டர்கள் பலம், தேர்தல் தில்லுமுல்லு இவை அத்தனைக்குப் பிறகும் தமிழ்நாட்டில் பாஜக 4 இடங்களில் மட்டுமே வென்றது!  இந்த வெற்றி அதிமுக தயவில் கிடைத்தது என்று சொன்னால் அரைவேக்காடு எச்ச ராஜா ஒத்துக்  கொள்வாரா?  பிறக்கும்போதே போராட்டத்தில் புடம்போட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைக்கும் போராடி வருகிறது!

  உழைப்புச் சுரண்டல், வகுப்பு வெறி இரண்டையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தாமல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் ஓயாது!  தேர்தல் சந்தையாகவும், வாக்குகள் சரக்காகவும் ஆக்கப்பட்ட கார்ப்பரேட் யுகத்தில் வாக்கு எந்திர தில்லுமுல்லுகள் திணிக்கப்படும் தேர்தல் களத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பின்னடைவை சந்தித்திருக்கலாம்.

  பின்னடைவிலிருந்து பாடம் பெற்று பீனிக்ஸ் பறவை போல் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டு எழும்.  1984 நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ..க. வெற்றி பெற்ற இடங்கள் இரண்டே இரண்டுதான் என்பதை எச்.ராஜா மறந்து விடக்கூடாது.  தேர்தல் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பின்னடைவை சந்தித்திருந்தாலும் மக்கள் போராட்டத்தில் பிந்தியதாக வரலாறு இல்லை.   இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிக்க முடியாத பகுதியான போராட்டத்தை எச்.ராஜா அல்ல, எந்தக் கொம்பாதி கொம்பனாலும் தடுக்க முடியாது!

  யாரும் தடுத்ததாக வரலாறு இல்லை!  இனிமேலும் இருக்க முடியாது!

  தெம்பு இருந்தால்!

  திராணி இருந்தால்!

  துணிவு இருந்தால்!

  தடுத்துப் பார்!

  கட்சி செயல்படாமல் தடை செய்யப்பட்ட போது தலைமறைவு வாழ்க்கையிலும் எங்கள் போராட்டம் நிற்கவில்லை! உழைக்காத உளுத்தர் கூட்டம் கொழுப்பேறி கொகக் கரிக்கும்போது உழைத்து உழைத்து  தழும்பேறிய கைகள் சும்மா பூ பறிக்குமா? மாஸ்கோவை வீழ்த்துவேன் என்று கொக்கரித்த ஹிட்லர் மாண்டான்! மாஸ்கோ வீழவில்லை! உலகமே பயந்த பாசிச ஹிட்லரின் கூலிப் படைகளை ஓட ஓட விரட்டியவர்கள் சோவியத் செஞ்சேனை படைகள்

  மறந்து போச்சா எச். ராஜா?

  இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி யாரையும் மிரட்டியதும் இல்லை உருட்டியதும் இல்லை! யாருடைய மிரட்டலுக்கும் பயந்ததுமில்லை, யாருடைய உருட்டலுக்கும் பயந்ததும் இல்லை!

  ஒன்றை மட்டும் உணர்த்துவோம்! அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட இந்தியா முழுவதும் சங்பரிவாரம் செங்கல் யாத்திரை நடத்திய  போது! பைசாபாத் நகரத்தில் நிறுத்துவோம் என்று ஒரு குரல் இந்தியா முழுவதும் கேட்கும் வகையில் ஒலித்தது! குரல் எழுப்பியவர் தெலுங்கானா போர்ப்படைத் தளபதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சி.ராஜேஸ்வர ராவ்! குரலுக்கு செவிமடுத்து மக்களை திரட்டியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!  அடுத்து வந்த பொதுத்தேர்தலில் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் வென்று காட்டியதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி! மறந்துவிட வேண்டாம்! தொண்டை இருக்கிறது என்பதால் கொக்கரிக்க கூடாது


  தலைவர்  இளசை கணேசன் 

  அறிஞர் அண்ணா  தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் 

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad