Header Ads

  • சற்று முன்

    மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமையில் தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட  திருநீர்மலை பகுதியில் பெரிய ஏரி சுற்றியுள்ள குரோம்பேட்டை திருநீர்மலை நாகல்கேணி மற்றும் பல்வேறு அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த ஏரி பயன்பட்டு வந்தது ஆனால் தற்போது ஏரிக்கு  அருகில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலிருந்து  இரசாயன கழிவுகள்,சட்ட விராதமாக மருத்துவ கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதால் இதில் உள்ள மீன்கள் செத்து மடிகின்றன அதுமட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் துர்நாற்றம் வீசுகிறது இதனால் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது என்று  அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர் 



    எனவே  தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பெரிய ஏரியை  தூர்வாரி சுத்தப்படுத்தி ஏரியை சுற்றி பொதுமக்கள்  நடைபாதை  மேற்கொள்ள பாதை அமைத்து தர வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட பல்லாவரம் செயலாளர் எம்.பி உதயச்சந்திரன் அவர்கள் தலைமையில் தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மக்கள் நீதி மைய்யம்  கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad