Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் அருகே தடுப்பணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

     

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளி கிராமத்தில் சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டில் பாம்பாற்று கரையின் அருகே அப்பகுதி மக்கள் காலம் காலமாக தங்கள் கிராமத்திற்கு என சுடுகாடாக  பயன்படுத்தி வருகின்றனர். இதில் தமிழக அரசின் சார்பில் சுமார் 3.50 கோடி மதிப்பிலான தடுப்பணை  அரசாணை வந்ததன் காரணமாக மயானத்தை சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த கிராமத்தில் இறந்தவர்களின் சுடுகாடு அடக்கம் செய்யப்பட்ட உடல்களை அதிகாரிகள் தோண்டி எடுத்து தீட்டு எரித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தடுப்பணை  இங்கு அமைத்தால் எங்களுக்கு மாற்று சுடுகாடு இல்லை  எனவே தடுப்பணை  அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தி மாற்று  இடத்தில் தடுப்பணை அமைக்க கோரி நீர்வளத்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad