Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு பெருவிழா

    கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு பெருவிழா இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருப்பதாக பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி பேட்டி


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தலம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமாகவும் தீந்தமிழ் படைத்த வீரமாமுனிவர் இம்மறை பணித்தளத்தின் 7 பணியாளராகவும் காமநாயக்கன்பட்டி திருத்தலத்தில் 4 பங்கு தந்தையாகவும் பணியாற்றது இம்மண்ணின் சிறப்புமிக்க ஒன்றாகும் இச் சிறப்பு பெற்று விழங்க கூடிய  இத்திருத்தல பரலோகம் மாதாவின் விண்ணேற்பு பெருவிழாவினைக்கான ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் திருத்தலத்தில் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். 

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இத்திருத்தலம் விண்ணேற்பு பெருவிழா நடைபெறாமல் இருந்தது இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேரடி திருப்பலி மிக சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது முன்னதாக வரும்  6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. 

    இதில் 14ஆம் தேதி மாலை ஆராதனை ஆடம்பர கூட்டு திருப்பலியும்  15ஆம் தேதி தேரடி திருப்பலையும் நடைபெற உள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த தேர்வு படி திருப்பலியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காண வருவார்கள் என்றும் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் பாலை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad