முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் சீறி பாய்ந்த காளைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் கருணாநிதியின் 99வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது இப்போட்டியை விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்கண்டேயன் மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இரண்டாவது சுற்றில் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் 19 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதலாவதாக கச்சேரி தளவாய்புரம் விஜயகுமார் மாட்டு வண்டியும், இரண்டாவதாக சந்திரகிரி லிங்கம் மாட்டு வண்டியும், மூன்றாவதாக மேல்மாந்தை முத்துராமலிங்கம் மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது. விமர்சையாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சாலையின் இருபுறங்களிலும் பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து எட்டயபுரம் தெப்பக்குளம் அருகே நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும் மாட்டு வண்டிக்கும் ரொக்கத்தொகை மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினர்.
கருத்துகள் இல்லை