Header Ads

  • சற்று முன்

    புதிதாக அமையவிருக்கும் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கந்திலி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட நார்சாம்பட்டி பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கந்திலி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில்  கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் வசித்து வரும் நிலையில் கந்திலி வழியாக மோட்டூர் செல்லும் வழியில் புதிதாக மதுபானக்கடை அமைக்கப் போவதாக அரசு அறிவித்து வந்த நிலையில் மதுபான கடையை  அந்த பகுதியில் அமைக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் பல முறை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் மனு கொடுத்துள்ளனர்

    இருந்த போதிலும் கண்டு கொள்ளாததால் வருகின்ற புதன் கிழமை மோட்டூர் பகுதியில் மதுபானகடை அமைக்கப்போவதாக கிடைத்த தகவலின் பேரில் கோபம் அடைந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர். திடீரென கந்திலி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் மோட்டூர் பகுதியில் மதுபானக்கடை வரக்கூடாது என கோரி மனு அளித்தனர். இதனால் சிறிது நேரம் கந்திலி காவல் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad