கோவில்பட்டியில் முரளி மருத்துவமனை நர்சுக்கு பாலியல் தொல்லை - மருத்துவர் முரளி வலைவீச்சு
கோவில்பட்டியில் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான டாக்டரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலை புதூரை சேர்ந்த செவிலியர் பட்டயப் படிப்பை முடித்த இளம்பெண் ஒருவர் கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள முரளி மருத்துவமனையில் செவிலியராக கடந்த 20ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர் முரளி, செவிலியர் பெண்ணுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் மருத்துவரின் மனைவியும் பெண் மருத்துவரான விமலா தேவியிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் உரிய விசாரணை நடத்தாமல் ஒருதலைப்பட்சமாக செவிலியர் பெண்ணை இழிவு படுத்தி வெளியேற்றியுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த பாதிக்கப்பட்ட நர்ஸ் தனது வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நர்ஸ் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரி விசாரணை நடத்தி மருத்துவர் முரளி மீது பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தலைமறைவான டாக்டரை தேடி வருகிறார்.
கருத்துகள் இல்லை