Header Ads

  • சற்று முன்

    திமுக ஆட்சியில் அதிமுக எதிர் கட்சியாக செயல்படுகிறதா அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி...

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கிருஷ்ணா நகர் மற்றும் மன்னார்சாமி நகர் பகுதியில் 1வது, 2வது, மற்றும் 4வது, தெருவில் சட்டமன்றம் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 36.74 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை  மற்றும் வாறுகால் அமைத்தல் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார் மகளிர் அணி செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, மேலஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் முருகன்,மனோகரன்,பழனி குமார், பழனிமுருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



    பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் :

    அதிமுகவினரை விமர்சிப்பதினாலேயே திமுகவின் செய்தி பத்திரிக்கைகளும் ஊடகங்களில் வெளிவருகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது நாளும் பொழுதும் அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் அதிமுகவினரை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்து வருகிறார் அதிமுகவினரை பார்த்து திமுக பயந்து கொள்கிறது

    பாஜகவுடன் அதிமுக இணைந்திருந்தாலும் கொள்கை ரீதியாக பல்வேறு முரண்பாடுகள் உள்ளது எங்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் முரண்பாடானா கொள்கைகளை பாஜக கொண்டுள்ளது என்று அனுபவத்தின் வாயிலாக பொன்னையன் தெரிவித்துள்ளாரே தவிர அதிமுகவிற்கும் பாஜகவும் எதிரான கருத்தை அவர் தெரிவிக்கவில்லை

    தமிழகத்தில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை முதல்வரின் கவனத்திற்கு செல்கிறது என்பதே எங்களுக்கு தெரியவில்லை ஆச்சரியமாகவும் உள்ளது.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து முதல்வர் தெரிந்துகொண்டு சொல்கிறாரா இல்லையென்றால் அரசியலுக்காக அமைதிப் பூங்கா நிலவுகிறது என்று கூறுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை முதல்வர் கவனத்திற்கு செல்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது

    அதிமுகவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் என்றுமே அதிகாரம் உண்டு. இது ஜனநாயக கட்சி திமுகவை போன்று குடும்ப கட்சி அல்ல ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் என்பதை இப்பொழுதே முன்னிலைப்படுத்தி வருகின்றனர் அதிமுகவினர் எனவே அது குடும்ப கட்சி அதிமுகவில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை அடிமட்டத்திலிருந்து வந்த தொண்டர்கள் இருவர் முதல்வரானது வரலாற்றிலேயே அதிமுகவில் நடந்துள்ளது

    சசிகலாவை பாஜகவில் இணைய அழைப்பு விடுத்தது முன்னாள் பாஜக மாநில தலைவர் எனவே இக்கேள்வியை அவர்களிடம்  தான் கேட்க வேண்டும் இது அவர்கள் இருவருக்கும் உண்டான பிரச்சினை என்றார் அவர்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad