Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேலாயுதபுரம் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் பாரம்பரிய மிக்க கும்மி பாட்டுக்கு நடனம் ஆடி அம்மனைவரவேற்கும் நிகழ்வு

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேலாயுதபுரம்  ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த திருக்கோவில் வைகாசி மாத திருவிழா இத் திருக்கோவில் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம் திருவிழாவில் காளியம்மனை வரவேற்கும் விதமாக பெண்கள் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே விரதம் இருந்து பாரம்பரிய மிக்க கும்மி பாட்டுக்கு நடனம் ஆடி அம்மனை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.. 

    கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த இத்திருவிழா இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் பள்ளி கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு பாரம்பரியமிக்க கும்மி பாட்டு இருக்கு நடனமாடி அம்மனை வரவேற்கும் நிகழ்வு வெகு விமர்சியாக நடைபெற்றது..

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அழிந்து வரும் கும்மி பாட்டு கலை இந்த சூழலில் பள்ளி கல்லூரி மாணவிகள் இடையே நம் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு  பெற்றோர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் பக்தர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad