குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதுப்பேட்டை ரோடு அருகே அமைந்துள்ள அண்ணா சிலை வரை மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் தலைமையிலும் மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சூரியகுமார் மற்றும் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் முன்னிலையிலும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது.


சுமார் 100க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த பேரணியில் கலைஞர் வாழ்க கலைஞர் புகழ் வாழ்க உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி திமுக கொடி பிடித்து புதுப்பேட்டை ரோடு அண்ணா சிலை அருகில் கலைஞர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இவரை தொடர்ந்து பேருந்தில் செல்லும் பயணிகள் மற்றும் இருசக்கர வாகனம் செல்லும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 99-வது பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து நகர காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் வாசலில்  வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த பேரணி  நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன்  நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.