• சற்று முன்

    கோவில்பட்டி சங்கரலிங்காபுரம் 10 வது தெருவில் சாலை வசதி கழிவுநீர் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை

     

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்கபுரம் 10 ம்  தெருவில்  100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற தற்போது அப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டு காட்சி அளிக்கிறது  மேலும் தரமான சாலைகள் அமைக்காததால்  வாகனங்கள் சென்று வர முடியாத சூழல் ஏற்படுவதாகவும் பல ஆண்டுகளாக கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு செய்யப்படாமல் இருப்பதால் கழிவு நீர் ஓடைக்கு  செல்லக்கூடிய நீர் தெருக்களில் தேங்கி நிற்பதாகவும் மழைக்காலத்தில் அப்பகுதி வழியாக சென்று வர முடியாத அவல நிலை  ஏற்படுவதாகவும் இதனால் கொசு தொல்லை ஏற்பட்டு அவ்வப்போது குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் இவ்விவகாரத்தில் தலையிட்டு சாலை கழிவு நீர் வாய்க்கால் வசதிகளை  ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad