வேளாண்மைத் துறை மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் அருகே தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த செவ்வாதூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை மற்றும் கலைஞரின் 2021-22ம் ஆண்டிற்கான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா தலைமையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி முன்னிலையில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் வேளாண்மை துறை வேளாண்மை பொறியியல் துறை தோட்டக்கலை துறை உள்ளிட்ட 13 துறைகளின் மூலம் கந்திலி வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 2500க்கும் மேற்பட்ட குனிச்சி எலவம்பட்டி ஆதியூர் உள்ளிட்ட 9 ஊராட்சி விவசாயிகளுக்கு சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தென்னை மரக்கன்றுகள் வழங்குதல் வரப்பில் உளுந்து சாகுபடி உபகரணங்கள் விசைத் தெளிப்பான் கைத்தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி வளாகத்திற்குள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மரக்கன்றுகள் நட்டனர்.
இவ்விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் மோகனா குமரேசன் வேளாண் துறை இணை இயக்குனர் ராஜசேகர் உதவி இயக்குனர் ராகினி தோட்டக்கலை துணை இயக்குனர் பார்த்திமா மற்றும் பொதுமக்கள் பயணிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை