Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூரில் கொலை குற்றவாளியை பிடிக்காமல் காலம் தாழ்த்தும் காவல் ஆய்வாளர் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட பொது மக்கள்

    கஞ்சா போதையில் கோஷ்டி மோதல் காரணமாக  அரசு மருத்துவமனை வளாகத்தில் ஓட ஓட வாலிபர் கொடூர கொலை செய்யப்பட்ட வழக்கில்  17நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியல்

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட டி எம் சி காலனி வாலிபர்களுக்கும் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  கடந்த 30 ஆம் தேதி மருத்துவமனையிலேயே  ஓட ஓட வெட்டிக் படுகொலை செய்தனர். இதில் கொலைக் குற்றவாளியான டி.எம்.சி காலனி பகுதியை சேர்ந்தவர் லெப்ட் சுரேஷ் போலீசார் கைது செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த காபப் சுரேஷ் என்பவருக்கும் அடிபட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திருப்பத்தூர் அழைத்து வந்து  காபப் சுரேஷ் வீட்டிலேயே திருப்பத்தூர் நகர உதவி காவல் ஆய்வாளர் பிரவீன்குமார்  தலைமையில் வீட்டு காவலில் வைத்து பாதுகாத்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் காவலர்களின்  கண்ணில் மண்ணைத் தூவி கொலை குற்றவாளி என கபாப் சுரேஷ் தப்பி சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கொலை சம்பவம் நடந்த 17 நாட்கள் ஆகியும்  கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளில் லெப்ட் சுரேஷை ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்து தப்பி ஓடிய கபாப் சுரேஷ் மற்றும், தமிழ்ச்செல்வன், லோகேஷ், ஆகிய 3 பேரையும் தற்போது வரை கைது செய்யவில்லை என கூறி வெட்டி படுகொலை செய்யப்பட்ட முகிலனின்   பெற்றோர்கள் மற்றும் கலைஞர் நகர் பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் இச்சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி இன்னும் ஓரிரு தினங்களில் கொலைக் குற்றவாளிகளை கண்டிப்பாக பிடிக்கும் என்று கூறியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad