அமெரிக்காவில் வசூலை தந்த டான்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது டான் படம். இந்தப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து கடந்த வார இறுதியில் திரையரங்குகளில் அரங்கு கொள்ளாத காட்சிகளாக காணப்பட்டது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படமும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளதுடன் வசூலிலும் சிறப்பான கலெக்ஷனை குவித்து வருகிறது.
சிவகார்த்திகேயனின் டான் படம் நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி, பால சரவணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது டான் படம். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகவும் பெரிய அளவில் வரவேற்பை தந்து வருகின்றனர்ரூ.100 கோடியை வசூலித்த டாக்டர் படம் முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான டாக்டர் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இந்நிலையில் அவரது அடுத்த படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது சிவகார்த்திகேயனுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த உற்சாத்துடன் அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்
கருத்துகள் இல்லை