கோவில்பட்டி அருகே 3 கடைகள் எரிந்து தீக்கிரையான முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சந்தித்து ஆறுதல் கூறி நிதிஉதவி வழங்கினார்.
கோவில்பட்டி அருகே 3 கடைகள் எரிந்து தீக்கிரையான சம்பவத்தில் கடை உரிமையாளர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சந்தித்து ஆறுதல் கூறி நிதிஉதவி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் ரயில்வே காலனியை சேர்ந்தவர் கோமதி (53). இதே ஊர், மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (40).சகோதரர்களான இவர்கள் இருவரும் நாலாட் டின்புத்தூர் முக்கு ரோட்டில் அடுத்தடுத்து சலூன் கடைகள் வைத்துள்ளனர். இவர்களது கடைக்கு அருகில் இதேஊர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த குருசாமி (37) என்பவர் பெட்டிக் கடையுடன் சேர்ந்து டீக்கடையும் நடத்தி வருகிறார். கடந்த 18ம்தேதி அதிகாலையில் சலூன் கடைகள் உள்ளிட்ட 3 கடையும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் கடையில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமடைந்தன.இந்நிலையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ சம்பவ இடத்திற்கு சென்று எரிந்த கடைகளை பார்வையிட்டு கடை உரிமையாளர் கோமதி மற்றும் பேச்சியம்மாளிடம் ஆறுதல் கூறி தனது சொந்த பணத்தில் நிதிஉதவி வழங்கினார்.மேலும் வங்கி லோனுக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறிய அவர், தாசில்தாரிடம் மனுக் கொடுங்கள், அரசு நிதிஉதவி கிடைக்க வழிவகை செய்து தருவேன் என்றும் தெரிவித்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட குழு தலைவி சத்யா,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை