Header Ads

  • சற்று முன்

    164 ஆவது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

    சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழாவில் 731 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். இதில், தமிழ்நாடு அரசில் பணியாற்றும் எம்.எஸ்.சண்முகம், மகேஸ்வரி உள்பட ஆறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தமிழ், பொருளாதாரம் உள்பட பல்வேறு பிரிவுகளில் பட்டம் பெற்றனர். அதேநேரம், கடந்த 2011-16 அ.தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 

    கடந்த ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு ஒரே மேடையில் ஆளுநரும் முதல்வரும் பங்கேற்க இருந்ததால் சர்ச்சை வரலாம் என்ற ரீதியில் தகவல்கள் வெளியானது. அண்மையில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் அமர்ந்திருந்த மேடையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தி மொழி குறித்துப் பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

    இந்நிலையில், சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் உயர்கல்வித் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கல்லூரியில் சேர்ந்து படிப்பு முடியும் வரையில் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது,'' எனக் குறிப்பிட்டார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad