Header Ads

  • சற்று முன்

    மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகர ஊர்காவல் படை வடக்கு மற்றும் வண்ணாரப்பேட்டை அரிமா சங்கம் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

    சென்னை மாநகர ஊர்காவல் படை வடக்கு மற்றும் வண்ணாரப்பேட்டை  அரிமா சங்கம் இணைந்து உலக மகளிர்தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் மஞ்சல் பை வழங்குதல் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதலுதவி உபகரணங்கள் வழங்குதல்,ஊர்காவல் படையினருக்கு தலைகவசம் வழங்குதல் நிகழ்ச்சி சென்னை மூலக்கடை அருகே வி.கே.கே மஹாலிள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை சென்னை ஊர்காவல்படை வடக்கு மண்டல தளபதி பி.எம்.ஜே.எஃப் லயன் விட்டோ பிளாக்கா தலையேற்றும் வண்ணாரப்பேட்டை அரிமா சங்கம் தலைவர் லயன் எஃப்.எக்ஸ்.ஆரோக்யதாஸ் முன்னிலை வகித்தும், அரிமா சங்கம் செயலாளர் லயன் எஸ்.ஜி.ரத்தினவேல் சுப்ரமணியம் வரவேற்புரையாற்றியும் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த சென்னை மாநகராட்சியின் மேயர் ஆர்.பிரியா மஞ்சள் பை வழங்குதல் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதலுதவி உபகரணங்கள்,ஊர்காவல் படையினருக்கு தலைகவசம் முதலியன வழங்கி சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

    இதில் முன்னால் மாவட்ட கவர்ணர் பி.எம்.ஜே.எஃப்.லயன் ரமேஸ் பாபு மற்றும் அம்பேத்கார் அரிமா சங்கம் லயன்.ஜி.பரமசிவம் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்தும் கோட்ட தளபதி லயன் எஸ்.முருகேசன்,டி.சுரேஸ்குமார் ஆகியோர் சிறப்பித்தும் வண்ணாரப்பேட்டை அரிமா சங்கம் பொருளாளர் லயன் ஏ.எஸ்.உதயகுமார் நன்யுறையாற்றி நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad