Header Ads

  • சற்று முன்

    அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்


    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தை சூழ்ந்த தொண்டர்கள் கூட்டம்.அண்ணா சாலையே சில மணி நேரம் போக்குவரத்தில் திண்டாடியது. ஏதோ கலைஞரின் பிறந்த நாள்ள கலைஞர் நேரில் வந்திருந்தால் எப்படி தொண்டர்கள் கூடுவார்களோ அது போன்று தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.

    69 கிலோ கேக்

    69 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆழ்வார்பேட்டை வீட்டில் மனைவி, மகன், மகள்,மருமகள், பேர குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.வெஜ் பிரியாணி, நான் வெஜ் பிரியாணி

    அதன்படி வெஜ் பிரியாணி, நான் வெஜ் பிரியாணி பாக்கெட்டுகள் அண்ணா அறிவாலயத்தை வந்தடைந்தன. அவற்றை நிர்வாகிகள் தொண்டர்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள். அண்ணா அறிவாலயத்தில் கமகமக்கும் பிரியாணி விருந்தை பெற அங்கு கூட்டம் கூடியுள்ளது.

    அண்ணா அறிவாலயம்

    அண்ணா அறிவாலயம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களையும் உணவை வழங்கி உதவி வருகிறார்கள். ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏராளமானோர் வாழ்த்துகளை அனுப்பியுள்ளார்கள். அது போல் அவரது ஆழ்வார்பேட்டை வீட்டருகேவும் தொண்டர்கள் திரண்டு வாழ்த்தி வருகிறார்கள். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad