• சற்று முன்

    கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவிலில் 17ஆம்ஆண்டு வருஷாபிஷேகம்


    கோவில்பட்டி ஸ்ரீ சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோயிலில் 17ம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோயிலில் 17ம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதையொட்டி திருக்கோயில் அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை சண்முக ஜபம் சிறப்பு பூஜைகளும் கணபதி ஹோமம்,தன பூஜை,நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள், நடைபெற்றன.அதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக வந்து   கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தொழிலதிபர் கருப்பசாமி, கட்டளைதாரர் காளிராஜன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


    கோவில்பட்டி 

    செய்தியாளர் அ.சிவராமலிங்கம்



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad