Header Ads

  • சற்று முன்

    புதிய தொழில்நுட்பங்களுடன் ஸ்பிலிட் ஏசிகளை அறிமுகப்படுத்தும் டெய்கின் நிறுவனம்

    உலகின் முன்னணி ஏசி தயாரிப்பு நிறுவனமான ஜப்பானின் டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான டெய்கின் ஏர்கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களுக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட புதிய வகை ஸ்பிலிட் ஏசிகளை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய வகை ஏசிகளில் எதிர்காலத்திற்கேற்ப தொழில்நுட்பங்கள் உள்ளன, இது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் இடத்தில் உள்ள ஏர்கண்டிஷனிங்கின் தரத்தை நிர்வகிக்க உதவுகிறது. டெய்கின் நிறுவனத்தின் ஆராய்ச்சிகளில் காற்றின் தரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, எனவே வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட வைஃபையுடன் கூடிய தயாரிப்புகளை வழங்குவதோடு, காப்புரிமை பெற்ற ஸ்ட்ரீமர் டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை 4 நட்சத்திரப் பிரிவுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இதன் டியூ கிளீன் தொழில்நுட்பம் உட்புற அலகுகளை வளிமண்டல நீரைக் கொண்டு சுகாதாரமான மற்றும் திறமையான செயல்பாடுகளை உறுதிப்படுத்துகிறது. 150 சதுர அடி இடம் என்பது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கும் பொருந்துவதால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெய்கின் ஏசிகள் ஒவ்வொருவருக்கும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டெய்கின் ஏசியின் இந்த வரம்பு ஒவ்வொருவருக்கும் கச்சிதமான குளிர்ச்சி மற்றும் காற்றின் தரத் தேவைகளை வழங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பரவியுள்ள மின்மயமாக்கலுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஏர் கண்டிஷனிங் தீர்வுகளைப் பெறுவதற்கு நுகர்வோருக்கு டெய்கின் ஏசி சிறந்த தேர்வாக உள்ளது.

    டெய்கின் பொதிகள் பொறியியல், பயன்பாடு மற்றும் சொகுசு ஆகிய அம்சங்களில் முன்னோடியாக இருக்கும் விஆர்வி ஹோம், டெய்கின் நிறுவனத்தின் மற்றொரு முதன்மையான ஏர் கண்டிஷனிங் தீர்வாக விளங்குகிறது. பாரம்பரிய ஸ்பிலிட் ஏர் கண்டிஷனிங் தீர்வுகளை போலல்லாமல் இதன் ஒரு வெளிப்புற அலகு பல உட்புற அலகுகளைக் கட்டுப்படுத்துகிறது. இது ஆற்றல் செயல்திறனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இடத்தையும் திறமையாகப் பயன்படுத்துகிறது மற்றும் நிறுவலின் போது எந்த சிரமமும் இருக்காது, இது நவீன குடும்பங்களுக்கான சிறந்த வீட்டு ஏர்கண்டிஷனர் தீர்வாக அமைந்துள்ளது. இதன் 4 ஹெச்பி திறன் கொண்ட ஒரு வெளிப்புற அலகு 6 உட்புற அலகுகளையும், 5 ஹெச்பி திறன் வெளிப்புற அலகு 6 உட்புற அலகுகளையும், மற்றும் 6 ஹெச்பி திறன் வெளிப்புற அலகு 8 உட்புற அலகுகளையும் இயக்க பயன்படுத்தலாம்.

    டெய்கின் ஏர் கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனவத்தின் திரு என். கே.ராவ், பிராந்திய இயக்குனர், கூறுகையில், "டெய்கினில் ஒவ்வொரு இந்தியரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'மேக் இன் இந்தியா' தயாரிப்புகளுக்கான தொலைநோக்குப் பார்வையை நாங்கள் கொண்டுள்ளோம். ஏசிகள், இப்போது அவசியமாகிவிட்ட நிலையில், வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைகளுக்கேற்ப சேவை செய்வதற்கான தயாரிப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் தரநிலைகளில் தீவிரமான மாற்றம் தேவைப்படுகிறது. டெய்கின் ஏசியின் புதிய வரம்புகளின் ஆற்றல், அதிக நுகர்வுக் கட்டணங்களின் தாக்கம் இல்லாமல், காலாவதியான மற்றும் பழைய தொழில்நுட்பங்களிலிருந்து மேம்பட்டவையாகும். உங்கள் வீட்டிற்கு ஒரு நம்பமுடியாத ஏர் கண்டிஷனிங் தீர்வை வழங்குவதற்காக டெய்கின் விஆர்வி ஹோமை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இது உங்கள் வீட்டின் பல வெளிப்புற அலகுகளை ஒரே வெளிப்புற அலகாக மாற்றுகிறது. இதன் திறமையான ஸ்விங் கம்ப்ரஸர், வடிவமைப்பு, நெகிழ்வுத்தன்மை மற்றும் சிறந்த குளீரூட்டும் செயல்பாடுகள் இதனை அடுத்த தலைமுறைக்கான ஏசியாக பறை சாற்றுகிறது என்று கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad