Header Ads

  • சற்று முன்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதில் மந்த நிலை காணப்படுகிறது

    தமிழகம் முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில், சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதில் மந்த நிலை காணப்படுகிறது.

    தமிழ்நாடு முழுக்க இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.


    மொத்தம் 12,838 உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிப் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. இருப்பினும், சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும்


    வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாலும், நிறைய இடங்களில் பூத் சிலிப் வழங்கப்படாதலால் வாக்காளர்கள் வாக்கு சாவடியில் அளிக்கின்றனர். இதனால் வாக்குகள் பதிவில் மந்த நிலை காணப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad