• சற்று முன்

    தமிழக அரசின் உத்தரவையடுத்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

     

    அரசு உத்தரவு 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது 100% மாணவருடன் பள்ளிகள் செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது போலவே தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கற்பித்தலுக்கான நாட்கள் குறைவாக உள்ளதால் பாடங்களை மாணவர்களுக்கு புரியும் வகையில் முழு வீச்சில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

    மேலும் மாணவ மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு மற்றும் கைகளில் கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அனைத்து வகுப்புகளுக்கும் இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் வருகை பதிவு 100% இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவையடுத்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad