• சற்று முன்

    ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

    இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைகிணறு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தை மாதம் 2ந்தேதி அதிகாலை 4 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை வேத விற்பண்ணர்கள் மந்திரம் ஓத சிறப்புடன் துவங்கியது. 

    கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், விக்ரக பூஜையுடன் கோமாதாவுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு, இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி எம்பெருமானுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாயல்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உறைக்கிணறு சத்திரிய இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகளும் பொதுமக்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad