கோவில்பட்டி அருகே பூக்கள் ஏற்றிச் சென்ற மினி லாரி திடீரென நிலைதடுமாறி விபத்து ஓட்டுனர் காயம்
ஓசூர் இருந்து பூக்களை மினி லாரி மூலம் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தளவாய்புரத்தில் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி மினிலாரி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பாலக்கோடு பகுதியை சேர்ந்த சிவகுமார் வாகனத்தை ஓட்டி வந்த சிவகுமார் காயங்களுடன் உயிர் தப்பினார். இதையொட்டி சம்பவ இடத்துக்கு வந்த கயத்தார் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறை போக்குவரத்து சீர்படுத்தினார். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கயத்தாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை