• சற்று முன்

    மலேசியா நாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

     

    மலேசிய நாட்டிற்கு வேலைக்கு சென்று அங்கு நடந்த  விபத்தில் உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டு தரக்கோரி அவரது  மனைவி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    மானாமதுரை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த சந்தியா என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று 5 வயதில்  பெண் குழந்தையும் இரண்டு வயதில் ஆண் குழந்தையும் இந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக அழகர்சாமி மலேசிய நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது மனைவி சந்தியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அந்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அழகர்சாமி விபத்தில் உயிரிழந்ததாக கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது மனைவி சந்தியா தனது இரு குழந்தைகளுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலம் முன்பு  மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டியை சந்தித்து இறந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி கண்ணீர்மல்க மனு அளித்தார் மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad