Header Ads

  • சற்று முன்

    உலக தொலைக்காட்சி தினம் நல்வாழ்த்துகள்

    இன்றைய தினம் உலக தொலைக்காட்சி தினம். தொலைக்காட்சியில் பணியாற்றும் உழையர்கள் அனைவருக்கும் அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    நாம் வானொலி மூலம் செய்திகளை கேட்டோம் மகிழ்ந்தோம். எங்கோ நடைபெறுகின்ற செய்திகள், திரை பாடல்கள், சினிமா கதைகள், விளையாட்டுகள் , நாடகங்கள் என அனைத்து உலக நிகழ்வுகளையும் வானொலி வாயிலாக கேட்டு அறிந்தோம். 

    அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக தொலைக்காட்சியை நாம் பயன்படுத்த தொடங்கினோம். இது நாள் வரை ஒலி வழியாக கேட்டு மகிழ்ந்த நாம் தொலைக்காட்சி வழியாக கேட்டும், பார்த்தும் மகிழ்ந்தோம். தொலைக்காட்சி நமக்கு பல செய்திகளை நிகழ்வுகளை கண் முன்னே நிழலாட செய்தது. நமக்கெல்லாம் தொலைக்காட்சியை அறிமுகமான தினம் இன்று. நமக்கெல்லாம் காட்சியும், ஒலியும் பார்த்து அதிசியத்த தினம் தான் இன்று.துர்தஷன் வாயிலாகத்தான் நாம் ரசிக்கமுடிந்தது. தூர்தஷன் நிலையத்தில் பணி என்றாலே அனைவரும் அவரை அதிசயமாக பார்ப்பார்கள். 

    உலக செய்திகள், தமிழக செய்திகள் , காண்போம் கற்போம், ஒளியும் ஒளியும் பாடல்கள், நாடகங்கள், சினிமா படங்கள், அன்றாட நிகழ்வுகள், பிரபலங்களின் நேர்காணல், அரசியல் நிகழ்ச்சிகள் என அனைத்தையும் கண்டுகளிக்கிறோம். 

    முதன் முதலில் தொலைக்காட்சியை ஜெர்மன் நாட்டில் 1928 கண்டுபிடிக்கப்பட்டது. 1975 சென்னையில்  அறிமுகமானது.  தொலைக்காட்சி நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். அவசர காலா கட்டம் என்றால் செய்தி வசிக்கும்  செய்தியாளரை காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்வார்கள். செய்திகளுக்கு ஒரு நேரம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு என்று ஒரு நேரம் ஒதுக்கியிருப்பார்கள். வெள்ளிக்கிழமை என்றாலே மாலை ஒளியும் ஒலியும் திரைப்பட பாடல்கள் தான், ஞாயிற்றுகிழமையென்றாலே திரைப்படம் என்று மக்கள் விரும்பி பார்ப்பார்கள். இப்படி சிறப்பு வாய்ந்த தூர்தர்ஷன் இன்று பல தனியார் தொலைக்காட்சிகளுக்கு வழியமைத்து கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad