Header Ads

  • சற்று முன்

    தமிழக மீனவர்களிற்கு நிபந்தனையுடன் விடுதலை, படகுகள் அரச உடமையாக்கம்

    எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள் 23 பேரும் பயணித்த மீன்பிடிப் படகு இரண்டினையும் அரசுடமையாக்குமாறும் மீனவர்களுக்கு 10 வருடத்திற்கு  ஒத்தி வைத்த ஒரு வருட சிறைத்தண்டனையும் விதித்து பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று (15 )உத்தரவிட்டது.

    ஒக்டோபர்  மாதம்  14ஆம் திகதி தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்க வந்த இரண்டு படகுகளையும் அதிலிருந்த 23 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைத்ததோடு அவர்களின் விபரங்களை யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். 

    இவ்வாறு ஒப்படைத்தவர்கள் தொடர்பான வழக்கை நீரியல்வளத் திணைக்களம்  பருத்தித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த வழக்கை  விசாரணைக்கு எடுத்த பருத்தித்துறை நீதிவான் 23 மீனவர்களையும்  விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டதோடு வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதிவான் தமிழக மீனவர்கள் 23 பேரிற்கும் 10 வருடத்திற்கு  ஒத்தி வைத்த ஒரு வருட சிறைத்தண்டனை  விதித்து தீர்ப்பளித்தார். இதேநேரம் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் மீன்பிடிக்கு உபயோகித்த இரு படகுகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தையும் அரச உடமையாக்குமாறு. கட்டளையிட்டார்.

        

    -இ.சாரங்கன், செய்தியாளர், இலங்கை-

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad