• சற்று முன்

    திருப்பத்தூர் அருகே புதைத்த பெண் உடலின் தலையை வெட்டி சென்ற மர்மநபர்களால் பரபரப்பு!

    திருப்பத்தூர் அருகே புதைத்த பெண் உடலின் தலையை வெட்டி சென்ற மர்மநபர்களால் பரபரப்பு!


    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (60)இரயில் டீ விற்கும் வியாபாரம் செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி மாதம்மாள் (45) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சனிக்கிழமை அன்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்து உள்ளார்.  அவரை நேற்று பாரதிதாசன் நகரில் உள்ள சுடுகாட்டில் உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்றிரவு அடக்கம் செய்த மாதம்மாள் உடலின் அருகே மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு தலை உள்ள பகுதியில் குழிதோண்டி தலையை மட்டும் வெட்டி சென்றுள்ளனர். அதன் காரணமாக அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad