Header Ads

  • சற்று முன்

    சசிகலாவை இணைப்பது குறித்து மேலிடம் முடிவு செய்யும் ஒபிஸ் அல்ல

     


    சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள்’’ என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அ.தி.மு.க.வில் எந்த காலத்திலும் சசிகலாவுக்கு இடமில்லை என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மாறுபட்ட இந்த கருத்து அக்கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அரசு நடந்த சமயத்தில், தர்மயுத்தம் நடத்தி அதன்பிறகு கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் இணையும்போது, ‘சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுடன் எந்தகாலத்திலும் எந்த காரணத்தை கொண்டும் எந்தவித உறவும், தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் இருந்தால் மட்டுமே நாங்கள் சேருவோம்’ என்று சொல்லிதான் அவர் கட்சியில் சேர்ந்தார். இதை இந்த நேரத்தில் சொல்வதற்கு கடமைபட்டிருக்கிறேன். சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களை எதிர்த்துதான் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தமே நடத்தினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு நீதி கேட்டும், அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் தர்மயுத்தம் நடத்துகிறேன் என்றார். அந்த நிலையை அ.தி.மு.க. எடுத்த பிறகுதான் அவர் கட்சியில் இணைந்தார். எனவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதை நினைவுபடுத்த வேண்டியது என் கடமையாக கருதுகிறேன் என்று  கூறினார்.

    அதனைத்தொடர்ந்து ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- சசிகலா பக்கம் ஓ.பன்னீர்செல்வம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறதே?பதில்:- யூகங்களுக்கும், அனுமானங்களுக்கும் இப்போது பதில் கூறமுடியாது. என்னை பொறுத்தவரை கடந்த காலத்தில் என்ன நடந்தது? என்பதை தான் சொல்லமுடியும்.

    கேள்வி:- சசிகலா விவகாரத்தில் கட்சியில் ஒருமித்த கருத்து எடுக்கப்படவில்லையா?

    பதில்:- கட்சியின் பொதுக்குழு கூட்டியே சசிகலா நீக்கப்பட்டுவிட்டார். அதுதான் முக்கியம். ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவரும் கையெழுத்து போட்டுதானே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    மேற்கண்டவாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad