Header Ads

  • சற்று முன்

    சென்னையில் நடமாடும் ஸ்கேன்,எக்ஸ்ரே வாகன சேவையை பெருநகர போலீஸ் கமிஷனர் பார்வையிட்டு தொடங்கி்வைத்தார்



    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நடமாடும் ஊடுகதிர் வாகனத்தை பார்வையிட்டு காவல் துறை பயன்பாட்டிற்கு வழங்கினார்

    சென்னை பெருநகர காவல் பிரிவிற்கு புதியதாக TATA Winger Vehicle Mobile X-Ray Baggage Scanner வாகனம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. இவ்வாகனத்தை காவல்துறை பயன்பாட்டிற்காக சென்னை பாதுகாப்பு பிரிவிற்கு சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப வழங்கினார்‌‌‌. காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் லோகநாதன் இ.கா.ப (தலைமையிடம்) மற்றும் செந்தில்குமார் இ.காப வடக்கு மண்டலம் உடன் இருந்தனர்‌‌‌. இவ்வாகனம் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பின் போது விழா நடைபெறும் இடங்களுக்கு சென்று விழாவிற்கு வருகை தரும் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டுவரும் கைப்பை மற்றும் பிற பொருட்களை ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்பட உள்ளது. நடமாடும் ஊடுகதிர் வாகனத்தின் மதிப்பு ரூ.32,99,000/- ஆகும். இது பொதுமக்களின் கைப்பை மற்றும் உடைமைகளை பிரித்து பார்க்காமலே அதனுள் இருக்கும் பொருட்களை (வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள்) ஆய்வு செய்து கண்காணிப்பு திரை மூலமாக கண்டறியமுடியும். மேலும் இது காவலருக்கு பணிச்சுமையை குறைப்பதோடு குறைந்த நேரத்தில் பொதுமக்களின் அதிக உடைமைகளை சோதனை செய்ய உதவுகிறது. இவ்வாகனம் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad